சென்னையில் நாளை நடைபெறும் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையும், புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையும் நாளை திறக்கப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சென்னைக்கு வரவுள்ளனர். இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 3.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க, கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார். இதற்காக அண்ணா அறிவாலயத்திலும், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Also watch
Published by:DS Gopinath
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.