"மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது" - பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக ராகுல் காந்தி தமிழில் ட்வீட்..

"வெறுப்பால் மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது" என பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துரைத்துள்ளார்.

ராகுல் காந்தி
  • Share this:
”எவ்வளவு தீவிரமான வெறுப்பும் மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது”  என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காவி சாயத்தை ஊற்றி அவமதித்தனர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பெரியாரிய இயக்கங்கள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்றன.

இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ”எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது” என தமிழில் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ். அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “தந்தை பெரியார் சிலைக்கு கோவையில் சில சமூக விரோதிகள் காவி சாயம் பூசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவே வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியாரின் சிலையை இழிவுபடுத்தியவர்கள் தமிழ் சமுதாயத்தின் விரோதிகளாகவே இருக்கமுடியும்” என்று கூறியுள்ளார்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading