ஜன.23ம் தேதி முதல் தமிழகத்தில் ராகுல் காந்தி பிரசாரம்...

ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 23ம் தேதி கோவையில் இருந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குகிறார்.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி முழு வீச்சில் தயாராக வருகிறது. அதற்காக தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் 3 நாட்கள் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  அதன்படி வரும் 23ம் தேதி கோவை வரும் ராகுல், அங்கு ஏற்பாடு செய்யப்படும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். பின்னர் அன்றைய தினமே சிறு, குறு தொழில் முனைவோரை சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார்.

  இதனையடுத்து 24 மற்றும் 25ம் தேதிகளில் திருப்பூர், ஈரோடு, கரூர். திண்டுக்கல் மாவட்டங்களில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  மேலும் படிக்க... திராவிட கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை: காயத்ரி ரகுராம்  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: