முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மு.க.ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட ராகுல் காந்தி விருப்பம் - செல்வப்பெருந்தகை தகவல்

மு.க.ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட ராகுல் காந்தி விருப்பம் - செல்வப்பெருந்தகை தகவல்

மு.க.ஸ்டாலின் சைக்ளிங்

மு.க.ஸ்டாலின் சைக்ளிங்

MK Stalin Cycling : ராகுல் காந்தி தமிழ்நாடு வரும்போது மு.க.ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட விருப்பம் தெரிவித்துள்ளார் என சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

ராகுல் காந்தி அடுத்த முறை தமிழ்நாடு வரும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்டுவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து பேசிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, போதிதர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு ராகுல் காந்தி வந்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வயது குறித்து பேசும்போது, அவர் வாரம் தோறும் சைக்கிள் ஒட்டுவதாக, தான் கூறியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக முதலமைச்சரிடம் பேசிய ராகுல்காந்தி, அடுத்த முறை தமிழகம் வரும்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஒட்ட வேண்டும் என்ற விருப்பத்தை முன் வைத்துள்ளதாகக் கூறினார்.

கிழக்கு கடற்கரை சாலைகளில் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் ஆரேக்கியத்தில் மிகவும் அக்கறை கொண்டவர். உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிளிங் உள்ளிட்ட பல பயிற்சிகளை செய்து வருகிறார்.

அவர், வார விடுமுறை நாட்களில் கிழக்கு கடற்கரை சாலைகளில் சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட பின் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Must Read : அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

top videos

    மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்து கொண்டே மக்களின் குறைகளையும் கேட்டறிவார். இவ்வாறு, மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Cycling, MK Stalin, Rahul gandhi, TN Assembly