தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தேசிய தலைவர்கள் முகாமிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மூன்று நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதில், முதல் கட்டமாக இன்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக, தனிவிமானம் மூலம் இன்று காலை 10.45க்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர், கார் மூலமாக சென்று 11.15க்கு வஉசி கல்லூரியில் வழக்கறிஞர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். நண்பகல் 12.45க்கு தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே 'ரோடு ஷோ' நடத்தி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். 1.20-க்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் உப்பளத் தொழிலாளர்களை சந்தித்து ராகுல் உரையாடுகிறார்.
பிற்பகலில் முக்காணி, குரும்பூர், ஆழ்வார்திருநகரியில் பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டுகிறார். இதையடுத்து, மாலை 4 மணிக்கு நாசரேத் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள செயின்ட் ஜான்ஸ் கதீட்ரல் தேவாலயத்தை பார்வையிடுகிறார். மேலும், 5 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.
Must Read: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
முதல் நாள் சுற்றுப்பயணத்தின் இறுதியாகி மாலை 6.15க்கு நாங்குநேரி டோல்கேட் அருகே நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election Campaign, Rahul gandhi, TN Assembly Election 2021