கன்னியாகுமரியில் ராகுல் காந்தி போட்டியிடக் கோரி விருப்பம் தெரிவித்து கராத்தே தியாகராஜன் விருப்ப மனு பெற்றுக்கொண்டார்.
மக்களவைத் தேர்தல் தேதி வெளியானது முதலே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் விருப்ப மனு பெறுவதில் மும்மரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள 10 தொகுதிகளில் புதுச்சேரி தவிர்த்த 9 தொகுதிகளுக்கான விருப்ப மனுவை அக்கட்சி பெற்றுவருகிறது. காங்கிரஸ் கட்சிக்கான 10 தொகுதிகள் எவை என இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், மதியம் முதலே காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன.
முதல் ஆளாக கன்னியாகுமரியில் ராகுல் காந்தி போட்டியிடவும், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்து கராத்தே தியாகராஜன் விருப்ப மனு பெற்றுக்கொண்டார். இன்று ஒரே நாளில் 140 பேர் விருப்பமனுவை வாங்கினர். நாளையும் விருப்ப மனு விநியோகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தேனி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஜே.எம்.ஆரூண் தனது மனுவை பூர்த்தி செய்து அளித்தார். இதேபோல் ஆரணி தொகுதியில் விஷ்ணு பிரசாத்தும், குமரி தொகுதியில் ரூபி மனோகரும் தங்களது விருப்பமனுக்களை அளித்தனர்.
Also watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.