இம்மாத இறுதியில் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்

ராகுல் காந்தி

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் ராகுல் காந்தி 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

 • Share this:
  இந்த மாத இறுதியில் தமிழகத்தில் ராகுல் காந்தி முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

  சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்தது.

  இந்த கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இந்த கூட்டத்தில், முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், மாநில செயலாளர் அகரம் கோபி, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  அந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, அதிமுக ஆட்சியின் ஊழல்கள் மீது விசாரணை நடத்தாமல் பாதுகாக்கும் பாஜக அரசுக்கு கண்டனம்.‘நெடுஞ்சாலை டெண்டரில் 3,500 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்ட புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நீக்கவும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 3 அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை தொடரவும் இந்த மாதத்துக்குள் சிபிஐ நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு தமிழக காங்கிரஸ் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   

  மேலும் படிக்க...இந்தோனேஷியாவில் கடலில் விழுந்த விமானத்தின் பாகங்களும் பயணிகள் உடல் பாகங்களும் கண்டெடுப்பு

   

  பின்னர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த மாத இறுதியில் ராகுல் காந்தி தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்றார்.

  மேலும், தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் திமுக தலைமையில் புதிய ஆட்சி அமையும். அதிமுக ஆட்சியாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளினால் அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற பொதுமக்கள் முடிவு செய்து விட்டனர் என்றும் அப்போது கூறினார்.
  Published by:Suresh V
  First published: