ராகுல் காந்தி வருகையில் தமிழகத்தில் எந்த மாற்றமும் நிகழாது - பா.ஜ.க, அ.தி.மு.க விமர்சனம்

ராகுல் காந்தி வருகையில் தமிழகத்தில் எந்த மாற்றமும் நிகழாது - பா.ஜ.க, அ.தி.மு.க விமர்சனம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் வருகையால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என பாஜக மற்றும் அதிமுக-வினர் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக, தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நாளை வரை மூன்று நாட்களுக்கு பரப்புரை மேற்கொள்கிறார். ராகுல் காந்தியின் பரப்புரை, தமிழக தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்திருக்கிறது.

  இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றும் அக்கட்சி தனித்துப் போட்டியிட தயாரா எனவும் தமிழக பாஜக தலைவர் முருகன் சவால் விடுத்துள்ளார்.

  பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேச ராகுல்காந்திக்கு எந்த தகுதியும் இல்லை என பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  ஒட்டுமொத்த துரோகங்களின் முகமாகவே காங்கிரசை தமிழக மக்கள் பார்ப்பதாக, அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன் தெரிவித்துள்ளார். காங்கிரசுக்கு தோல்வியையே பரிசாக தமிழக மக்கள் அளிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

  தமிழகத்தில் ராகுல் காந்தி தாமதமாகவே பரப்புரையை தொடங்கி இருப்பதாக, மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, பத்திரிகையாளர் கணபதி குறிப்பிட்டார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: