காளைக்கு பயந்து மேடையில் ஏறிய மாடுபிடி வீரரை இறக்க முயன்ற பாதுகாவலர் - தடுத்து நிறுத்திய ராகுல் காந்தி

காளைக்கு பயந்து மேடையில் ஏறிய மாடுபிடி வீரரை இறக்க முயன்ற பாதுகாவலர் - தடுத்து நிறுத்திய ராகுல் காந்தி

அவனியாபுரத்தில் ராகுல் காந்தி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைக்கு பயந்து மேடையில் ஏறிய வீரரை ராகுல் காந்தியின் பாதுகாவலர் இறக்க முயற்சிக்கும்போது பாதுகாவலரை ராகுல் காந்தி தடுத்து நிறுத்தினார்.

 • Share this:
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், மதுரை அவனியாபுரத்தில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, ராகுல் காந்தி டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  அங்கிருந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்துக்குச் சென்றார். பார்வையாளர்கள் மேடையில் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை ராகுல் காந்தி கண்டுரசித்தார். பார்வையாளர் மேடையில் அமர்ந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டி கண்டுகளித்துக் கொண்டிருந்த ராகுல்காந்தி, ஆர்வத்தில், நின்றுகொண்டு பார்த்தார்.

  அப்போது சீறி பாய்ந்த காளை, வீரர்களிடம் போக்கு காட்டியது. அதற்கு பயந்து, மேடை அருகே தடுப்பில் ஏறினர். அப்போது, ராகுல்காந்தி நின்றிருந்த இடத்தில் ஏறி வீரர்கள் வருவதை பார்த்தை பாதுகாவலர் ஒருவர், அவர்களை தடுக்க முற்பட்டார். உடனே சுதாரித்த ராகுல், பாதுகாவலரின் கையைப்பிடித்து தடுத்துவிட்டார். உடனே பாதுகாவலர் பின்வாங்கினார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: