தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாகவும், இந்தி பேச பிடிக்காதவர்கள், இந்தியை படிக்க வேண்டாம் என்று கூறியவர் ஜவஹர்லால் நேரு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா எழுதிய "மாமனிதர் நேரு" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ.வேலு, சேகர் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புத்தகத்தை வெளியிட்ட பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர், மாமனிதர் நேரு புத்தகத்தை வெளியிட்டதில் தான் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். 2015ல் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வரை வரவில்லை என்றும், இதை பார்க்கும்போது நேருவின் அருமை புரிகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மூலம் இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறார். ராகுல் காந்தியில் பேச்சு நேருவின் பேச்சு போல் உள்ளது. கோட்சேவின் வாரிசுகளுக்கு காந்தி, நேருவின் வாரிசுகளில் பேச்சு எரிச்சலை உண்டாக்கதான் செய்யும்” என தெரிவித்தார்.
முன்னதாக மேடையில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நேருவை புகழ்ந்து பேசினார்.
இக்கால தலைமுறையினருக்கு நேருவின் வரலாறு தெரியாமல் இருப்பதாகவும், "மாமனிதர் நேரு" புத்தகம் அதை பூர்த்தி செய்யும் எனவும் ப. சிதம்பரம் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Jawaharlal Nehru, Mahatma Gandhi, Rahul gandhi