தமிழகத்துக்கு நான் கடமைப்பட்டவன்: மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவார் - சென்னை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

தமிழகத்துக்கு நான் கடமைப்பட்டவன்: மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவார் - சென்னை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

ராகுல் காந்தி

சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

 • Share this:
  சென்னையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஹசன் மவுலானா, செல்வப்பெருந்தகை, முனிரத்தினம், திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘பா.ஜ.க அல்லது கூட்டணி கட்சியில் இருந்தால் அவமரியாதை மட்டும் தான் இருக்கும். ஆனால் நாங்கள் தமிழர்களை சகோதர சகோதரிகளாக நினைக்கிறோம். இந்தியாவில் இரண்டு சித்தாந்தகள் உள்ளன. அனைவரையும் அடிபணிய வைக்க வேண்டும் என்பது ஒன்று. சகோதரத்துவத்தை விரும்புவது மற்றொன்று. தொன்மையான வரலாற்றை கொண்டுள்ள தமிழகத்தை சேர்ந்த முதல்வர் அடிபணிந்து செல்வது ஏற்கத்தக்கது அல்ல.

  ஒரு மொழி தான் பெரிது, ஒரு கலச்சாரம் தான் பெரிது என்ற இந்தியா எனக்கு வேண்டாம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா காலில் விழ வேண்டும் என்ற ஆசைப்படவில்லை. ஆனால் விழ வேண்டிய தேவை உள்ளது. அவர் நேர்மை இழந்ததால் காலில் விழுந்து கிடக்கிறார். தமிழக பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. திறமை வாய்ந்த இளைஞர்கள், அறிவு சார்ந்த சமூகம் கொண்ட மாநிலம் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
  தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ள அரசு, தமிழக மக்களை மதிக்கும் அரசாங்கமாக இருக்கும். தமிழக மண்ணிற்கு வருபவரை, தமிழர்கள் அவமதித்தது இல்லை. ஒரு பங்கு அன்பு செலுத்தினால், இரண்டு மடங்கு அன்பு செய்பவர்கள் தமிழர்கள். இதை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். தமிழகம் இல்லாமல் இந்தியா கிடையாது. இந்தியா என்ற சிந்தனைக்கு அடித்தளமே தமிழகம் தான்.

  பல சோதனைகளைச் சந்தித்த பாரம்பரியம் இது. இப்போது தமிழகத்தை காக்க வந்துள்ளேன். தமிழகத்தை காப்பதன் மூலம், இந்தியாவைக் காக்க வந்துள்ளேன். சிறு, குறுந்தொழில்கள் தான் தமிழகத்தின் முதுகெழுப்பு. பணமதிப்பு இழப்பின் மூலம்
  இந்த கட்டமைப்பை தாக்குகிறார்கள். ஜி.எஸ்.டி மூலம் உற்பத்தியை துறையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் இந்த தாக்குதலைத் தடுப்பதற்காக. நான் தமிழன் அல்ல பிறப்பால். ஆனால் தமிழ் மக்களின் மனது தெரியும். தமிழை கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறேன். சில இலக்கியங்களை படித்திருக்கிறேன்.
  பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்த நிலத்தில் வேர் அறுக்கப்படுவார். இதற்கு முன் நடந்த தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு இடையேயானது. ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க, மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் ஒருபுறம், தமிழர்கள் மற்றொருபுறம். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார். தமிழகத்திற்கும், தமிழக மக்களும் நான் என்னென்றும் கடமைப்பட்டவன். எனக்கு தமிழர்களுடன் ஒரு உறவுமுறை வேண்டும். அது சமத்துவமானதாக, மரியாதை நிரம்பியதாக இருக்கவேண்டும்.

  தமிழகம் தமிழ்நாட்டிலிருந்து ஆட்சி செய்யப்படவேண்டும். டெல்லியிலிருந்து ஆட்சி செய்யப்படக் கூடாது. தமிழகம் தான் இந்தியா என்று நான் சொல்லும் இந்தியா என்பதும் தமிழ்நாடுதான். இந்தியாவுக்கு முன்பு தமிழகம் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்றால் அது இந்தியாவே இல்லை. எல்லா பாரம்பரியத்துக்கும் மரியாதை. ஒரு மொழி, மற்ற மொழிகளைவிட பெரியது என்று கூறும் இந்தியா வேண்டாம். ஒரு கலாச்சாரம் மற்ற கலாச்சாரத்தைவிட பெரியது என்று கூறும் இந்தியா வேண்டாம். எனக்கு தமிழ் மொழியும் முக்கியம், வங்க மொழியும் முக்கியம், அதேபோல கன்னட மொழியும் வேண்டும்’என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: