Home » News » Tamil-nadu » RAHUL GANDHI PONGAL WISHES IN TAMIL TWEET SKD

உங்களுடன் பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறேன் - ஜல்லிக்கட்டு வீடியோவுடன் தமிழில் ட்வீட் செய்து அசத்திய ராகுல் காந்தி

உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

உங்களுடன் பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறேன் - ஜல்லிக்கட்டு வீடியோவுடன் தமிழில் ட்வீட் செய்து அசத்திய ராகுல் காந்தி
ராகுல் காந்தி
  • Share this:
நாடு கடந்து வாழும் தமிழ்ரகளால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிந்துவிடுதல்ல. தை 1-ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், தை 3-ம் தேதி காணும் என்றும் என்று அதற்கு தை 4-ம் தேதி திருவள்ளுவர் தினம் என்றும் ஆண்டுதோறும் தமிழர்களால் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. தமிழர்கள் ஆண்டு முழுவதும் எத்தனை எத்தனை பண்டிகைக்களைக் கொண்டாடினாலும் தமிழர்களின் பண்டிகை என்பது பொங்கல்தான். அறுவடை நாளை சிறப்பிக்கும் ஒன்றாக பாரம்பரியமாக பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரியத்தில் இருந்துவருகிறது. பொங்கல் விழாவைப் பொறுத்தவரையில், மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை.

இன்று, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க வருவது குறித்து ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.  உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட்டுன் சீறிப் பாயும் காளைகளின் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 14, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading