Home /News /tamil-nadu /

தமிழகத்தில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி.. குமரி முதல் காஷ்மீர் வரை பயணம்

தமிழகத்தில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி.. குமரி முதல் காஷ்மீர் வரை பயணம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Rahul Gandhi : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரை செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ராகுல் காந்தி 4 நாட்கள் தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். அதற்காக அடுத்த மாதம் 7ம் தேதி மாலை கன்னியாகுமரிக்கு ராகுல் காந்தி வருகிறார். அங்கு காந்தி, காமராஜர் மண்டபங்களில் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரம் நடக்கிறார். அவரின் பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கி.மீ. தூரம் 150 நாட்கள் நடைபெறவுள்ளது.

    இந்த பாத யாத்திரை செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறது. அங்கிருந்து களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு பாத யாத்திரையாக செல்கிறார். இந்த பாத யாத்திரையை வெற்றிகரமாக நடத்துவது குறித்து தமிழகத்தில் உள்ள 76 காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தொண்டர்களை அழைத்து செல்வது மற்றும் தேவையான எற்பாடுகள் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ராகுல் காந்தி 7ம் தேதி மாலையில் கன்னியாகுமரி வருகிறார். அங்கு காந்தி, காமராஜர் மண்டபங்களில் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரம் நடக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அத்துடன் அன்றைய பயணம் நிறைவடைகிறது.

    மீண்டும் மறுநாள் காலை பாத யாத்திரையை தொடர்கிறார். கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை சுமார் 60 கி.மீ. தூரம். இந்த தூரத்தை சுமார் 3 நாட்களாக ராகுல் நடக்கிறார். ஒவ்வொரு நாளும் வழிநெடுக வரவேற்பு கொடுப்பது, மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை ஆலோசித்து வருகிறார்கள். ராகுல்காந்தியின் பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கி.மீ. தூரம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

    இதில், 4 நாட்கள் தமிழகத்தில் நடைபெறுகிறது. அதன்படி, இந்த பாத யாத்திரையானது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நடைபெறுவதால் தமிழகத்தில் மேலும் ஒரு பகுதிக்கு அவர் வர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவை கூடலூர் பகுதிகளுக்கு பாத யாத்திரை செல்வது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ராகுல் காந்தி தலைமையில் பாதயாத்திரை பேரணி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ளது. கன்னியாகுமரியில் தொடங்க உள்ளது. இந்தப் பேரணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறோம்.

    Must Read : கோவையில் யாராவது சட்டத்தை கையில் எடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது - பாஜகவினரை எச்சரிக்கும் செந்தில்பாலாஜி

    இந்த பாத யாத்திரைக்காக 4 நாட்கள் தமிழகத்தில் ராகுல்காந்தி வர இருக்கிறார். இந்த பாதயாத்திரை பேரணி தமிழ்நாட்டில் 59 கிலோ மீட்டர் நடைபெற உள்ளது. அதற்கு பின்பு கேரளாவுக்கு சென்று, மீண்டும் தமிழகத்தில் நீலகிரி அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் நடைபயண பேரணி நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளை அழைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். கண்டிப்பாக கூட்டணி கட்சிகளை அழைப்போம். என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Congress, Kanyakumari, Rahul gandhi

    அடுத்த செய்தி