ராகுல் காந்தி ஒரு கோமாளி... - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி

ராகுல் காந்தி ஒரு கோமாளி... - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி

சி.டி.ரவி

மக்கள் தலைவரையே தேடுகிறார்களே தவிர கோமாளியை இல்லை...

 • Share this:
  ராகுல் காந்தி ஒரு கோமாளியைப் போல நடைந்து கொள்கிறார் என்றும், அதிமுக-பாஜக இடையில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தமிழகத்திற்கான பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி கூறியுள்ளார்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் அதிமுக-பாஜக இடையே எந்த சிக்கலும் இல்லை. தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. நாளைக்குள் தொகுதி பங்கீடு நிறைவடையும் என உதகையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

  பொதுமக்களை கவர்வதற்காக ராகுல் காந்தி ஒரு கோமாளியைப் போல செயல்படுவதாகவும் தமிழகம், கேரளா உள்பட இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தலைவரையே தேடுகிறார்களே தவிர கோமாளியை இல்லை என்று விமர்சித்த சி.டி. ரவி, தமிழகத்தில் அதிமுக அரசு ஜனநாயக முறைப்படி செயல்படுவதாக கூறினார்.

  அப்போது, அதிமுக ஆட்சியில்தான் பெண்கள் மீது அதிக வன்கொடுமை நடைபெற்று வருவதாகவும், பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் அமைச்சரே பாலியல் புகாரில் சிக்கி உள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  Must Read : அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

   

  இதைக் கேட்டு சிறிது நேரம் மவுனம் காத்தார் சி.டி.ரவி, பெண்கள் மீது வன்கொடுமை செய்வதை பாஜக ஒருபோதும் ஏற்காது என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: