Home /News /tamil-nadu /

மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிட்டார் ராகுல் காந்தி

மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிட்டார் ராகுல் காந்தி

‘உங்களின் ஒருவன்’ நூலை வெளியீடு

‘உங்களின் ஒருவன்’ நூலை வெளியீடு

Ungalil oruvan Book : கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் படிக்கவும் ...
    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

    கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக்கொண்டார். இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார். பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளிக்கொண்டுவந்துள்ளது.

    சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று பிற்பகல் 4 மணிக்கு தொடங்கியது புத்தக வெளியிட்டு விழா. திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இந்த நிகழ்வுக்கு தலைமையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசினார்.

    Must Read : நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்.. மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் பரபரக்கும் போஸ்டர்

    இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: DMK, Durai murugan, MK Stalin, Rahul gandhi

    அடுத்த செய்தி