பாஜக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகாது: ப.சிதம்பரம்!

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆதரிக்கும் மோடியை இந்திய மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று ப .சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகாது: ப.சிதம்பரம்!
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
  • News18
  • Last Updated: April 13, 2019, 4:53 PM IST
  • Share this:
நீட் தேர்வு தமிழகத்தில் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என ராகுல் காந்தி  உறுதியாக கூறியுள்ளார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளரைச் சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகாது என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்கும். ஆனால்
பா.ஜ.கவின் ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 20 மாதங்களில் 0.1%  உற்பத்தி சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் இது போன்ற சரிவு ஏற்பட்டதில் இன்னும் 2, 3 மாதங்களில் இது கூடுதலாகும் என்றும் ப.சிதம்பரம் விமர்சித்தார்.

தங்கள் ஆட்சிக்கு பின் பேரழிவு ஏற்பட்டால் கூட பராவாயில்லை என கருதுபவர் மோடி என்று சிதம்பரம் குற்றம்சாட்டினார்.மேலும், மின்னணு வாக்கு எந்திரத்தில் சிறு, சிறு கோளாறுகள் இருப்பது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. காங்கிரஸ் அரசு அமைந்தால் மின்னணு வாக்கு இயந்திரத்தில் சீர்திருத்தம் செய்யப்படும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு தேர்தலின் போது உள்ள தேர்தல் அறிக்கையை மீண்டும் புதிதாக்கி தற்போது பா.ஜ.க தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக தெரிவித்த அவர், அந்த தேர்தலில் சொன்ன எதையும் பா.ஜ.க செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

எதிர்கட்சிகாரர்கள் மட்டும் வசதி படைத்தவர்கள். ஆளும் கட்சிகாரர்கள் பஞ்ச பரதேசிகளாக உள்ளதால், வருமான வரி துறையினர் கைப்பற்றும் பணத்தை அவர்களுக்கு தேர்தல் செலவிற்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள் என்றும் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்