தமிழர்களின் பண்பாடு இந்தியாவின் அடையாளமாக திகழ்கிறது - ராகுல்காந்தி பெருமிதம்

Youtube Video

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை எனவும், அது வீரத்தின் அடையாளம் என்பதை உணர்ந்துக்கொண்டதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

 • Share this:
  மத்திய அரசு தமிழ் மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க முயற்சி செய்வதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனி விமானம் முலம் மதுரை விமானம் நிலையம் வந்தடைந்தார். பின்னர் சாலை மார்க்கமாக அவனியாபுரம் சென்ற அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிடுவதற்காக வந்திருந்தார். பின்னர் ஒரே மேடையில் அமர்ந்து அவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

  பின்னர், டெல்லி செல்வதற்கு முன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழர்களின் பண்பாடு இந்தியாவின் அடையாளமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை எனவும், அது வீரத்தின் அடையாளம் என்பதை உணர்ந்துக்கொண்டதாகவும் கூறினார்.
  Published by:Yuvaraj V
  First published: