கன்னியாகுமரி சிறுவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ராகுல்காந்தி!

கன்னியாகுமரி சிறுவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ராகுல்காந்தி!

ராகுல்காந்தி!

நேற்றிரவு ராகுல் தன்னை தொடர்பு கொண்டு புதிய ஷூ பிடித்திருக்கிறதா, அளவு சரியாக இருக்கிறதா என்றும் கேட்டதாக சிறுவன் ஃபெலிக்ஸ் தெரிவித்தார்.

  • Share this:
வாக்குறுதி அளித்தது போலவே கன்னியாகுமரியைச் சேர்ந்த சிறுவனுக்கு விளையாட்டு ஷூ ஒன்றை வாங்கி அனுப்பி வைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகைதந்த ராகுல் காந்தி, மார்ச் 1ம் தேதி கன்னியாகுமர் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் செல்லும் வழியில் பாரைக்கோடு என்ற இடத்தில் 4ம் வகுப்பு பயிலும் அந்தோனி ஃபெலிக்ஸ் என்ற மாணவரை பார்த்தார். உடனே தனது அணிவகுப்பு வாகனங்களை நிறுத்திய ராகுல் காந்தி கீழ் இறங்கி சென்று சிறுவனை சந்தித்து பேசினார். அருகில் இருக்கும் டீக்கடை ஒன்றில் சிறுவனுடன் சென்று பேசிய ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது தான் ஒரு ஓட்டப்பந்தய வீரர் என அவன் கூறியிருக்கிறான்.

தன்னுடைய சிறு வயது ஞாபகங்களை அசை போட்ட ராகுல் தனது அனுபவத்தில் இருந்து சில டிப்ஸ்களை சிறுவனுக்கு அளித்துள்ளார். பின்னர் சிறுவனிடம் ஸ்போர்ட்ஸ் ஷூ இல்லாதது ராகுலுக்கு தெரியவந்தது.

ராகுல்காந்தி!


இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னர் ராகுலின் அலுவலகத்தில் இருந்து சிறுவனின் தந்தைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. சிறுவனின் கால் பாதம் அளவை தெரிந்து சொல்லுமாறு கேட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று சிறுவன் ஃபெலிக்ஸிற்கு புதிய ஷூ ஒன்றை ராகுல் காந்தி கொரியரில் அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு சிறுவன் ஃபெலிக்ஸ் அளித்துள்ள பேட்டியில், நேற்று தனக்கு 5900 ரூபாய் மதிப்பிலான புதிய ஷூவை ராகுல் அனுப்பியதாகவும், அதன் பின்னர் நேற்றிரவு ராகுல் தன்னை தொடர்பு கொண்டு புதிய ஷூ பிடித்திருக்கிறதா, அளவு சரியாக இருக்கிறதா என்றும் கேட்டதாக தெரிவித்தார். மேலும் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக வரவேண்டும் என்றும் தன்னுடன் தொடர்பில் இருக்குமாறும் தெரிவித்ததாக ஃபெலிக்ஸ் கூறியுள்ளார்.

சிறுவன் ஃபெலிக்ஸின் தந்தை அந்தோனி சேவியர் திருச்சியில் மர வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், கன்னியாகுமரியில் சிறிய ஆடைக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இது தொடர்பாக சிறுவனின் தந்தை கூறுகையில், என் மகனுக்கு இது ஒரு அற்புதமான ஒன்று, அவர் சிறுவயது முதலே ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.அவருக்கு சரியான வழிகாட்டுதலும், பயிற்சியும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

 

 
Published by:Arun
First published: