அ.தி.மு.க முகக்கவசத்தைக் கழட்டினால் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் இருக்கும் - சேலம் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சனம்

அ.தி.மு.க முகக்கவசத்தைக் கழட்டினால் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் இருக்கும் - சேலம் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சனம்

ராகுல் காந்தி

அ.தி.மு.கவின் முகக்கவசத்தைக் கழட்டினால் உள்ளே பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸின் முகம் இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே, மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிராசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘இந்த தேர்தல் இரண்டு அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. நாம், தமிழ் கலாச்சாரம் மீது ஒரு முழுமையான தாக்குதலை சந்தித்து வருகிறோம். இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள், மதங்கள், மொழிகளின், மாநிலங்களின் ஒருங்கிணைப்பு. எந்த ஒரு மொழியோ, கலாச்சாரமோ ஒன்றை விட மற்றொன்று உயர்ந்தது அல்ல. அனைத்து மொழிகளும், பண்பாடுகளும், பழக்க வழக்கங்கள் தான் இந்தியாவை உருவாக்கியுள்ளது. ஒரே மொழி என்பதை ஏற்க முடியாது. கி.வீரமணி பேசும் போது கொரோனா காலத்தில் முகக்கவசம் முக்கியம் என சிறப்பாக வலியுறுத்தினார்.

எல்லோரும் முககவசம் அணிந்திருப்பதால் சிரிக்கிறார்களா என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. பழைய அ.தி.மு.க இப்போது இல்லை. அ.தி.மு.க முககவசத்தை கழட்டினால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க முகம் இருக்கும். ஒரு தமிழரும் மோடியின் முன் தலை குணிய விரும்புவதில்லை. அப்படி இருக்கும் போது, தமிழக முதலமைச்சர் அமித்ஷா, மோடியின் முன்பு தலை குணிந்து நிற்பது ஏன்? ஏனென்றால் மத்திய அரசு புலனாய்வு துறையை கையில் வைத்துள்ளது. தவறு செய்தவர்கள் அவர் முன் தலை குணியவேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் அதற்கான விலையை நீங்கள் கொடுக்கவேண்டி வரும். எந்த ஒரு மனிதன் தமிழ்நாட்டின் பண்பாட்டை காக்கவேண்டிய பொறுப்பில் உள்ளாரோ, அவர் அதை பொருட்படுத்தவில்லை. நீங்கள் அனுமதித்ததால் தான் இந்த நாடே இயங்கி கொண்டிருக்கிறது.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியும் தமிழ்நாட்டின் சிறு குறு தொழில்கள் மீதான மிகப்பெரும் தாக்குதல். இதை முதலமைச்சர் நரேந்திர மோடியிடம் கேட்க மாட்டார். விவசாயிகளை பாதிக்கும் மூன்று விவசாய சட்டங்களை ஏன் நிறைவேற்றினீர்கள் என கேட்க தைரியம் இல்லாதவராக இருக்கிறார் முதலமைச்சர். அமித்ஷாவும், மோடியும் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என இந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கொடுத்துள்ளார். நான் தமிழ் தெரிந்தவன் அல்ல. ஆனால் உங்களின் எண்ண ஓட்டங்களை புரிந்துகொள்ள கூடியவராக இருக்கிறேன். உங்களின் மொழி, பன்பாடு மீது தொடுக்கும் போரை ஏற்க மாட்டீர்கள் என கருதுகிறேன்.

பா.ஜ.கவிற்கு அதிக அளவிலான பணம், சக்தி, ஆட்கள் உள்ளார்கள். முதலில் அவர்கள் தமிழகத்தில் நுழைவதை தடுத்தால் தான் டெல்லியில் இருந்து அப்புறபடுத்த முடியும். நாங்கள் தமிழகத்தின் மீது சிறு அக்கறை, மரியாதை செலுத்தினால், எங்களுக்கு அதிக அளவில் தமிழகம் தரும் என அனுபத்தில் தெரிந்துகொள்கிறேன். இதை நரேந்திர மோடி புரிந்துகொள்ளவில்லை. ஒரே வழி மரியாதை, பாசம், அன்பு மட்டும் தான்.இதை, இந்த தேர்தலின் முடிவில் அவர்களுக்கு புரிய வைப்போம். மு.க.ஸ்டாலின் முதல்வராவார் என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று. தேர்தல் வைத்துதான் அதனை தெரிந்துகொள்ளவேண்டும் என்பது அவசியமில்லை. மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்’ என்று தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: