முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தென் ஆப்பிரிக்கா தொடரில் புஜாரா, ரஹானேவுக்கு கல்தா?- ட்ராவிட் சூசகம்

தென் ஆப்பிரிக்கா தொடரில் புஜாரா, ரஹானேவுக்கு கல்தா?- ட்ராவிட் சூசகம்

ஏன் அணியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என்பது குறித்த தெளிவான தகவல் தொடர்பு எங்களிடம் இருக்கும். அதை வீரர்களிடமும் விளக்குவோம் என்பதால், இதைப் பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது.

ஏன் அணியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என்பது குறித்த தெளிவான தகவல் தொடர்பு எங்களிடம் இருக்கும். அதை வீரர்களிடமும் விளக்குவோம் என்பதால், இதைப் பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது.

ஏன் அணியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என்பது குறித்த தெளிவான தகவல் தொடர்பு எங்களிடம் இருக்கும். அதை வீரர்களிடமும் விளக்குவோம் என்பதால், இதைப் பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது.

  • Last Updated :

    தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் புஜாரா, ரஹானேவுக்கு பதிலாக புதுமுகங்களை களத்தில் இறக்க இந்திய அணி தயாராகி வருவது தலைமைப் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டின் பேச்சு மூலம் தெரிகிறது.

    அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்கலாம். அப்போது, வீரர்களுடன் தெளிவான தகவல்தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்று ராகுல் ட்ராவிட் கூறுகிறார் என்றால் ஷைன் பண்ணாத வீரர்களுக்கு கல்தா கொடுக்க வேண்டும் அதை அவர்களிடம் முறையாக தெரிவிக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

    தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டது. கேப்டன் கோலி முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை. 2-வது டெஸ்ட்டில் விளையாடினார். புஜாரா, ரஹானே இருவரும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் பெரிதாக ரன் ஸ்கோர் செய்யவில்லை. வர வர மாமியார் கழுதை போல் ஆனாளாம் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்திய பிட்ச்களில் கூட புஜாரா, ரஹானே ஷைன் ஆவதில்லை என்றால் என்ன அர்த்தம்?

    மேலும் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ரிஷப் பந்த் வந்து விடுவார். ஸ்ரீகர் பரத் இருக்கிறார், சஹாவையும் புறக்கணிக்க முடியாது, பிரிதிவி ஷா தென் ஆப்பிரிக்காவில் ஏ அணியில் ஹனுமா விஹாரியும் ஆடி வருகிறார். எனவே ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வல், ரிஷப் பண்ட் என்று பேட்டிங் வரிசை இருக்கலாம் என்று தெரிகிறது.

    இந்நிலையில் அடுத்த டெஸ்ட் தொடர் குறித்து பேசிய ராகுல், ‘எங்களுக்குத் தேர்வுக் குழுவில் நல்ல தலைவலி காத்திருக்கிறது. யாரை அணியில் தக்கவைப்பது, நீக்குவது என்ற கடினமான முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். சிறப்பாகச் செயல்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காக ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி நடக்கிறது.

    ஆதலால், அணித் தேர்வு என்றாலே எங்களுக்கு நல்ல தலைவலி காத்திருக்கிறது. அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்கலாம். ஏன் அணியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என்பது குறித்த தெளிவான தகவல் தொடர்பு எங்களிடம் இருக்கும். அதை வீரர்களிடமும் விளக்குவோம் என்பதால், இதைப் பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது’ என்றார்.

    top videos

      ராகுல் ட்ராவிட் கூறுவதைப் பார்த்தால் புஜாரா, ரஹானே, இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்பு இருக்காது என்று தெரிகிறது.

      First published: