எதிர்ப்புகளைத் தாண்டி ரஃபேல் ஊழல் விவகார புத்தகம் வெளியானது!

பறக்கும் படை நடவடிக்கையால் புத்தக வெளியீட்டு விழாவுக்கு இலவச விளம்பரம் கிடைத்துள்ளது.

எதிர்ப்புகளைத் தாண்டி ரஃபேல் ஊழல் விவகார புத்தகம் வெளியானது!
நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்
  • News18
  • Last Updated: April 2, 2019, 8:49 PM IST
  • Share this:
தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ’நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ புத்தகத்தை செய்தியாளர் என்.ராம் வெளியிட்டார்.

பிரான்ஸ் உடனான ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், "நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" என்ற பெயரிலான புத்தகத்தை இன்று மாலை வெளியிடுவதாக பாரதி புத்தகாலயம் அறிவித்திருந்தது.

இந்த புத்தகத்தை பத்திரிகையாளரும், இந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம் வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. திடீரென்று, தேர்தல் நடத்தை விதி மீறல் என்று காரணம் காட்டி, அச்சடிக்கப்பட்ட புத்தகங்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்த விவகாரம் குறித்து பதிலளித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ, ‘புத்தகத்தை தேர்தல் ஆணையம் தடை செய்யவில்லை’ என்று பதிலளித்தார்.

அதனையடுத்து, சென்னை தேனாப்பேட்டையிலுள்ள பாரதி புத்தகாலயம் அலுவலகத்தில் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்து குழுமத் தலைவர் என்.ராம் புத்தகத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் குறித்து பேசிய என்.ராம், ‘சிறு நிகழ்ச்சியாக முடிந்திருக்க வேண்டிய புத்தக வெளியீடு ஆட்சியாளர்களால் பெரிய அளவில் மாறியுள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டது பாராட்டுக்குரியது’ என்று தெரிவித்தார்.எனினும், புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது யார் என்பது தெரியாமலேயே உள்ளது.

மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்ரீதர், "இதுகுறித்து என்னிடம் தகவல் இல்லை. ஆயிரம் விளக்கு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

ஆயிரம் விளக்கு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிசாமியோ,"புத்தகம் கைப்பற்றப்பட்டது குறித்து பறக்கும் படையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

யார் உத்தரவிட்டார்களோ தெரியவில்லை. பறக்கும் படை நடவடிக்கையால் புத்தக வெளியீட்டு விழாவுக்கு இலவச விளம்பரம் கிடைத்துள்ளது.

Also see:


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

First published: April 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading