ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மக்கள் மௌன புரட்சியுடன் இருக்கின்றனர்... வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - ராதிகா சரத்குமார்

மக்கள் மௌன புரட்சியுடன் இருக்கின்றனர்... வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த சமத்துவ மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் தங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த சமத்துவ மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் தங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தேர்தலை சந்திக்கின்றது. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளல் ராதிகா சரத்குமார் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், மக்கள் மௌன புரட்சியுடன் இருக்கின்றனர் என்றும் மாற்றம் வேண்டும் எனவும் கூறினார். தமிழகத்தில் ஏன் மாற்றம் இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுக தலைமை இல்லாத ஒரு கட்சி என்றும் விமர்சனம் செய்தார்.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் செயல்பாட்டை மறந்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது பலருக்கும் பிடிக்கவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் “இதுவரை கலைத்துறையினருக்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி ஏதும் செய்யவில்லை என்றும், திமுகவினர் வீடுகளில் தற்போது வருமான வரி சோதனை என்பது எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் விமர்சித்தார்.

திமுகவினர் நல்லவர்கள் போல் போர்வையை பொத்திக்கொண்டு சித்தரித்துக் கொண்டிருப்பதாகவும், தலைமையில் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை இல்லை என்றும், திமுகவினர் நகைச்சுவை பேச்சாளர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள் என அனைவருமே பெண்களை தரக்குறைவாக பேசுவது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

Must Read :  என் வழி, தனி வழி... வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

தமிழகத்தில் தற்போது கருத்து திணிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஜெயலலிதா இறந்த பொழுது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் பாஜக மீது பெரிய அளவிற்கு பற்றோ பிடிப்போ இல்லை என்றும் ராதிகா கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை (ஞாயிறு) மாலை 7 மணியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: All India Samathuva Makkal Katchi, Radhika sarathkumar, TN Assembly Election 2021