விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ராதாகிருஷ்ணன்

தடுப்பூசி போட்டுக் கொண்ட ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிந்திருந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று 91 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

 • Share this:
  திருச்சியில் இரண்டாவது நாள் கொரோனா தடுப்பூசி போடும் பணியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

  திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அண்ணல் காந்தி அரசு தலைமை மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, இனாம்குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை, லால்குடி அரசு மருத்துவமனை என 5 இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் என ஒரு மருத்துவமனையில் 100 தடுப்பூசி என 5 மருத்துவமனைகளிலும் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிந்திருந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று 91 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

  திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 2வது நாள் தடுப்பூசி போடப்படும் பணியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை ஊழியர் என்ற முறையில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்தார். கொரோனா இரண்டாம் அலையை தடுக்க தடுப்பூசி மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
  Published by:Vijay R
  First published: