இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக சுகாதார பணியாளர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதியில் 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 6 கோடிக்கும் மேல் வாக்களிக்க உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாக்குச்சாவடிகளில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் கொரோனா தோற்று உறுதி செய்தவர்கள் உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பொருத்தவரை 5911 வாக்குச்சாவடிகள் உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கு 13 கிட் வழங்கப்படுகிறது. இதில் பொது மக்களுக்கான கை கழுவும் திரவம், தேர்தல் அலுவலர்களுக்கான கை கழுவும் திரவம், முக கவசம், உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி, பொதுமக்களுக்கான கையுறை, தேர்தல் அலுவலர்களுக்கான கையுறை, மருத்துவ கழிவுகள் போட ஏதுவான குப்பை பை, பி.பி.ஈ கிட் என அனைத்தும் இருக்கும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதேபோல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 சுகாதார பணியாளர்கள் பணியில் இருப்பார்கள். தமிழகம் முழுவதும் 1,77,874 தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு நேரத்தில் கடைசி நேரம் கொரோனா தொற்று உறுதி செய்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கும் நிலையில் அவர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதற்கும் சுகாதாரத்துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Also read... திருச்சியில் தேர்தலை முன்னிட்டு 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு!
சுகாதார துறை தரப்பில் வழங்கியுள்ள மருத்துவ உபகரணங்கள் இன்று வாக்குச்சாவடி இயந்திரத்துடன் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக அவசியமற்ற பணிகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும்.
தேர்தலுக்கும் தடுப்பூசி போடுவதற்கும் தொடர்பில்லை. தடுப்பூசி போடுபவர்கள் தொடர்ந்து போடலாம். 7-ம் தேதி பிறகு பிரசாரம் செய்து அனைவரையும் தடுப்பூசி போட அழைப்போம். தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வரலாம். வந்தாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.