• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்

நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்

நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவுறுத்தல்

நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவுறுத்தல்

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

  • Share this:
    சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், தொற்று நோய்க்கு கவனம் செலுத்தி வரும் நேரத்தில், தூய்மை பணியில் ஈடுபடும் பெண்களுக்கு தொற்றா நோய் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை தமிழகத்தில் 5.4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், 2ம் தவணை செலுத்த 57 லட்சம் பேர் தகுதி பெற்ற உள்ள நிலையில், அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்றார். 21% விழுக்காடு மட்டுமே 2ம் தவணை செலுத்தி உள்ளதாகவும், மத்திய அரசில் இருந்து வழங்கப்படும் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு உடனடியாக பிரித்து அனுப்பப்படுகிறதுஎனவும் குறிப்பிட்டார்.

    Also Read : இல்லம் தேடி கல்வி.. மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

    இந்நிலையில் 53.8 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக கூறிய அவர், 2ம் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார். எனவே 18 வயதிற்கு கீழுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து தேசிய நிபுணர் குழு அனுமதி அளித்த உடன் தமிழகத்தில் உடனடியாக தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கூறினார்.

    மூன்றாம் அலையின் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்கிற நிலையில், அரசு வழங்கியுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மக்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றும், நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர் பண்டிகை நாட்களில் பொருட்கள் வாங்க செல்லும் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்கள் கண்காணிக்கப்படும் அதேபோல் ஓராண்டுக்கு கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: