• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விதிகளைத் தளர்த்துவதால் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

விதிகளைத் தளர்த்துவதால் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)

விதிகள் தளர்த்தப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டுவிடக்கூடாது. சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும், கைகளை சுத்தமாக வைத்து, மாஸ்க் அணிவதும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார் ராதாகிருஷ்ணன்

  • Share this:
    காய்ச்சல் முகாம்கள், தொற்று இருப்பவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கு உதவியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், விதிகள் தளர்த்தப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டுவிடக்கூடாது. சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும், கைகளை சுத்தமாக வைத்து, மாஸ்க் அணிவதும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

    நேற்று காய்ச்சல் முகாம்கள் சிலவற்றை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திங்கள்கிழமை முதல் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள் என்று சுகாதாரத் துறை கவலை கொண்டுள்ளது. குறைந்தது ஆறு அடி தூரத்தை கடைபிடிப்பது போன்ற நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கை கழுவுதல் மற்றும் முகமூடி அணிவது ஆகியவற்றையும் தவறாமல் பின்பற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    மேலும்,  சென்னையில் 12,354 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 8.02 லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும் கூறினார். இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 37,000 நபர்களை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

    மேலும் பார்க்க:-

    சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்வு - என்னென்ன இயங்கும்...?

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தற்போது 6-வது கட்டமாக வருகிற 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கிற்கு இடையே சென்னையில் சில தளர்வுகளும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தனியாக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: