வெளிநாடுகளில் ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இல்லை என்றும், எனினும் பொதுமக்கள் கவன குறைவாக இருக்கக்கூடாது எனவும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தகுதியுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் , சீனா, நியூசிலாந்து , இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையம் வருபவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கொரோனா நெகடிவ் சான்றிதழோடு வந்தாலும் அவர்களுக்கு மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், 7 நாட்கள் வரை அவர்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து, பங்காதேஷ், போட்சுவானா, மொரிசியஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஏழு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கொரோனா நெகடிவ் சான்றிதழுடன் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
அந்த சான்றிதழ் இருந்தால் தமிழ்நாடு வந்தவுடன் ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ள அமைச்சர், ஒரு வார காலம் சுயமாக உடல்நிலையை கண்காணித்து அறிகுறிகள் தென்பட்டால் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Must Read : கொரோனா 12-வது மெகா தடுப்பூசி முகாம் - தடுப்பூசி போடாதவர்களுக்கு அழைப்பு..
இந்த 12 நாடுகள் அல்லாமல் பிற நாடுகளிலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு விமான நிலையம் வரும் போது, ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்படாது என்று தெரிவித்துள்ள மா.சுப்ரமணியன், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை பயணிகளின் செலவிலேயே செய்யப்படும் எனவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Omicron, Radhakrishnan