Home /News /tamil-nadu /

மோடியும், அமித்ஷாவும்.. அடுத்தது பாஜக ஆட்சி தான் - திமுகவுக்கு ராதாரவி எச்சரிக்கை

மோடியும், அமித்ஷாவும்.. அடுத்தது பாஜக ஆட்சி தான் - திமுகவுக்கு ராதாரவி எச்சரிக்கை

ராதாரவி

ராதாரவி

Radharavi Speech: இந்தியாவில் இரண்டு பெரும் அக்ஸ்யூட்கள் என்று மோடியையும், அமித்ஷாவையும் ராதாரவி குறிப்பிட்டு பேசியது அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டு இருந்தது. வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் அங்கு உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதனையடுத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதேபோல, தமிழகம் முழுவதும் மாவட்ட  தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், திருச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் வானதி ஸ்ரீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், ராதாரவி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    அந்தக் கூட்டத்தில் பேசிய ராதாரவி, ‘அடுத்துவரும் எம்.பி தேர்தலில் நாங்கள் (பாஜக) தான் ஆட்சி. மகாராஷ்டிராவில் அமைச்சர்களை சிறையில் தள்ளி எப்படி நடந்ததோ அதேபோல தமிழ்நாட்டிலும் நடைபெறும். அ.தி.மு.கவில் இருந்துவந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். அப்படியென்றால் தி.மு.கவில் யாருக்கும் தகுதியில்லை என்று அர்த்தம்.

     



    பா.ஜ.க ஆட்சியில் ஊழல் பட்டியலை காட்டுங்கள் பார்ப்போம். பா.ஜ.கவின் நம்பிக்கை நட்சத்திரமே அண்ணாமலைதான். நான், எம்.ஜி.ஆரைப் பார்த்துள்ளேன். கருணாநிதியைப் பார்த்துள்ளேன். அண்ணாவைப் பார்த்துள்ளேன். ஜெயலலிதாவைப் பார்த்துள்ளேன். ஆனால், அண்ணாமலைப் போல பேச்சுத் திறமையைப் பார்க்கவில்லை. தி.மு.க தோல்வியை நோக்கி போகிறது. அடுத்த ஆளும் கட்சி நாம்தான்.

    தமிழ்நாட்டிலும் ஒரு ஷிண்டே புறப்படுவார் - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சூசகம்

    முன்பெல்லாம் பா.ஜ.க கூட்டத்துக்கு செல்கிறோம் என்று காவல்துறை மதிக்க மாட்டார்கள். தற்போது, பா.ஜ.க கூட்டத்துக்கு செல்கிறோம் என்றால் காவல்துறை சல்யூட் அடிக்கிறார்கள். இந்தியாவிலேயே இரண்டு பெரும் அக்யூஸ்ட்கள் இருக்கின்றனர். ஒன்று மோடிஜி.. இன்னொருவர் அமித்ஷா.. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். கருவறுத்துவிடுவார்கள்.. ஜாக்கிரதை’ என்று  பேசியுள்ளார். அவருடைய பேச்சு இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது..
    Published by:Karthick S
    First published:

    Tags: BJP, Modi, Radharavi

    அடுத்த செய்தி