“அண்ணா அறிவாலயத்திற்கு உருது மொழியில் பெயர் வைக்கும் சூழல் ஏற்படும்“ - ராதாரவி காட்டம்

“அண்ணா அறிவாலயத்திற்கு உருது மொழியில் பெயர் வைக்கும் சூழல் ஏற்படும்“ - ராதாரவி காட்டம்
பேரணியில் பேசிய ராதாரவி
  • Share this:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களைக் கண்டித்து பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.

சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெற்றது. தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக வந்த பா.ஜ.க தொண்டர்களை சேப்பாக்கம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது மேடையில் பேசிய நடிகர் ராதாரவி, “தமிழகத்தில் இஸ்லாமியர்களைத் தி.மு.க தூண்டி விடுவதாக குற்றம்சாட்டினர். குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன் தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால் விரைவில் அண்ணா அறிவாலயத்தில் தமிழை எடுத்துவிட்டு உருது மொழியில் பெயரை வைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.


இந்தியா முழுவதும் 3 கோடிக்கும் மேலே அந்நியர்கள் இருப்பதாகவும் அவர்களைக் கண்டறியவே குடியுரிமை சட்டம் இருக்கிறது. ஆனால் இந்தியர்களைப் பயன்படுத்தி தி.மு.க இதில் அரசியல் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்