ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருவள்ளூரில் வெறி நாய் கடித்த 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை!

திருவள்ளூரில் வெறி நாய் கடித்த 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை!

வெறி நாய் கடித்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

வெறி நாய் கடித்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வெறி நாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

  பூனிமங்காடு பகுதியில் வெறி நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அத்துடன், பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோரை நாய்கள் கடித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  மேலும், முன்னெச்சரிக்கையாக மாணவர்கள் கம்பு, குச்சியுடன் வெளியே செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Thiruvallur