முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமனம்!

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமனம்!

ஆர்.சண்முக சுந்தரம்

ஆர்.சண்முக சுந்தரம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் அரசுத்தரப்பில் ஆஜராகியிருக்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, முந்தைய ஆட்சியில் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், தலைமை குற்றவியல் வழக்கறிஞர்கள், அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடர்கள், அரசு வழக்கறிஞர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, தற்போது புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், 1953 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில், வழக்கறிஞர் ராஜகோபால் – ரங்கநாயகி தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

சட்டப்படிப்பை முடித்து, 1977 ம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்த அவர், மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனிடம் ஜூனியராக பணியைத் துவங்கினார்.

ராஜிவ்காந்தி படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஜெயின் கமிஷனில், தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞராக பணியாற்றினார்.

கடந்த 2000ம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 1996 – 2001 ம் ஆண்டுகளில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராகவும், 2002 முதல் 2008 ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் படிக்க:   எதிர்கட்சித் தலைவர்... தாயின் தலைமகன்... அ.தி.மு.க அலுவலகம் முன்பு ஓ.பி.எஸ் ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் அரசுத்தரப்பில் ஆஜராகியிருக்கிறார்.

டான்சி நில பேர ஊழல் தொடர்பாக புகார் தயாரித்து கொடுத்ததற்காக இவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Tamil Nadu govt, Tamilnadu