Home /News /tamil-nadu /

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் - நல்லகண்ணு கோரிக்கை

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் - நல்லகண்ணு கோரிக்கை

ஆர்.நல்லகண்ணு

ஆர்.நல்லகண்ணு

பாலியல் வன்கொடுமை மற்றும் ஆணவ படுகொலையை வன்மையாக கண்டிப்பதாகவும், இவற்றை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்.நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை, தர்மபுரி மாணவி சௌமியா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை, கிருஷ்ணகிரி நந்தீஷ்- சுவாதி தம்பதியினர் ஆணவ படுகொலையை கண்டித்து
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் பாலியல் மற்றும் ஆணவ படுகொலைகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.நல்லகண்ணு, தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் பாலியல் வன்கொடுமை மற்றும் ஆணவ படுகொலையை வன்மையாக கண்டிப்பதாகவும், ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும் எனவும், நிவாரண உதவிகளை கட்சி பாகுபாடு இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய ஆர்.நல்லகண்ணு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை விட கூடுதல் நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Honor killing

அடுத்த செய்தி