கருணாநிதி, ஜெயலலிதா உருவம் கொண்ட ஐம்பொன் மோதிரங்கள்.. ஆர்வத்துடன் வாங்கி செல்லும் கட்சி தொண்டர்கள்..

Youtube Video

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சின்னங்கள் பொறித்த ஐம்பொன் மோதிரங்கள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரத்திற்கு வரும் சாதாரண தொண்டர்கள் முதல் உயர்மட்ட தலைவர்கள் வரை தங்களின் கட்சி சின்னம், தலைவர்கள் உருவம் பொறித்த மோதிரம், ஆடைகளை அணிந்து பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பது வழக்கம். இதற்காக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள "சர்வம் மெட்டல்" நிறுவனத்தில் ஐம்பொன்னலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொறித்த மோதிரங்கள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

  இங்கு முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கட்சி தலைவர்களின் படம் பொறித்த ஐம்பொன் மோதிரங்கள் பல மாடல்களில் தயாரிக்கப்பட்டு வருகிறன.

  ஐம்பொன்னலான மோதிரங்களை அணிவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவும் எனவும் இவ்வகையான மோதிரங்களை கட்சி தொண்டர்கள் விரும்பி வாங்கி செல்வதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக போதிய அளவில் ஆட்கள் கிடைக்காததால் உற்பத்தி சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் நிறுவன ஊழியர் தனுஷ்.

  மேலும் படிக்க...ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திமுகவை தோற்கடிப்போம் : அர்ஜுன் சம்பத் 

  இருப்பினும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து அதிகளவிலான ஆர்டர்கள் குவிந்து வருவதால் இத்தொழிலில் ஈடுபட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

   

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: