ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கரூர் மாணவியை தற்கொலை செய்ய தூண்டியவர்களை விரைந்து கண்டுபிடிக்கவும்: அன்புமணி ராமதாஸ்

கரூர் மாணவியை தற்கொலை செய்ய தூண்டியவர்களை விரைந்து கண்டுபிடிக்கவும்: அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

வெண்ணெய்மலை மாணவியை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியவர்கள் யார்? என்பதை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கரூரில் பாலியல் வன்கொடுமை காரணமாக 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மாணவி, தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், வெண்ணெய்மலை மாணவியை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியவர்கள் யார்? என்பதை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  இதுதொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  வெண்ணெய்மலை மாணவியை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியவர்கள் யார்? என்பதை விரைவாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

  கோவை, கரூர், திண்டுக்கல், சென்னை என கல்விக்கூடங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன செய்தாலும் சட்டத்தில் ஓட்டைகள் வழியாக தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான். இதை மாற்ற வேண்டும்.

  பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நீதி வழங்குவதில் தான் தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய குற்றங்களில் அதிகபட்சமாக இரு மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Anbumani ramadoss, Karur, Sexual harrasment, Suicide