• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பா.ஜ.க.வைத்தான் எதிர்த்தாரா ரஜினி? சந்தேகத்தைக் கிளப்பும் பா.ஜ.க. தலைவர்களின் ரியாக்‌ஷன்..!

பா.ஜ.க.வைத்தான் எதிர்த்தாரா ரஜினி? சந்தேகத்தைக் கிளப்பும் பா.ஜ.க. தலைவர்களின் ரியாக்‌ஷன்..!

ரஜினி

ரஜினி

  • Share this:
உண்மையில் பா.ஜ.க.வைத்தான் எதிர்த்தாரா ரஜினி என சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் பா.ஜ.க. தலைவர்களின் எதிர்வினை உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.


கடந்த புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். ரஜினி தனது பேட்டியில், "டெல்லியில் நடக்கும் போராட்டம் உளவுத்துறையின் தோல்வியால் நடக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இரும்புக்கரம் கொண்டு அந்த போராட்டத்தை அடக்கி இருக்க வேண்டும்.


கட்சிகளும், சிலரும் மதத்தையும், மதத்தினரையும் தூண்டுகோலாக வைத்து அரசியல் செய்கிறார்கள். இது சரியான போக்கு அல்ல. இப்பிரச்சினையை சரிசெய்ய முடியவில்லை எனில் ராஜினாமா செய்ய வேண்டும். நான் பா.ஜ.க.வின் ஊதுகுழல், பா.ஜ.க. என் பின்னால் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி சொல்வது வேதனையாக இருக்கிறது", என ரஜினிகாந்த் பா.ஜ.க., அரசை முன் எப்போதும் இல்லாத வகையில் கண்டித்து காட்டமாக பேசியிருந்தார்.


மத்திய அரசு மீதான இந்த விமர்சனத்துக்கு இதுவரை பா.ஜ.க தலைவர்கள் பதில் அளிக்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர். பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிடம் ரஜினி கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், எந்த பதிலையும் ஹெச்.ராஜா தெரிவிக்கவில்லை. வழக்கமாக எல்லா விவகாரங்களுக்கும் பதிலளிக்கூடிய ஹெச்.ராஜா, ரஜினி குறித்து வாய்திறக்காமல் அமைதியாக சென்றார்.


அதேபோல், ரஜினி பேச்சு குறித்து பா.ஜ.க., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும், மழுப்பலான பதிலையே அளித்துள்ளார். உளவுத்துறையின் தோல்வி என ரஜினிகாந்த் குற்றச்சாட்டுக்கு, "இஸ்லாமியர்கள் வாழக்கூடிய பகுதிகளில் காவலர்கள் செல்ல இயலாத நிலை உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் உளவுத்துறை எப்படி செல்ல முடியும்" என்ற பதிலை சொல்லி இருக்கிறார்.


ரஜினியின் கருத்தை கண்டிக்காமல், பா.ஜ.க., அமைதி காப்பது என்பது, உண்மையில் ரஜினி பா.ஜ.க-வைத்தான் கண்டித்தாரா என்ற கேள்வியை எழுப்புவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.


Also see...



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: