Home /News /tamil-nadu /

குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பதா? திருமண விழாவில் குவாட்டர் சிக்கன் இலவசம் என அறிவித்த மாப்பிள்ளை வீட்டார்

குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பதா? திருமண விழாவில் குவாட்டர் சிக்கன் இலவசம் என அறிவித்த மாப்பிள்ளை வீட்டார்

குடிப்பழக்க நோயுள்ளவர்கள்

குடிப்பழக்க நோயுள்ளவர்கள்

செய்தியின் தலைப்பை கேட்டவுடன் அதிர்ந்திருப்பீர்கள். இப்படி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் தான் அரங்கேறியுள்ளது. மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்பது குழந்தையிடம் கேட்டால் கூட அழகாக கூறும். காலம் மாறிவிட்டதாக கூறி இளைஞர்கள் தங்கள் குடும்ப நலனையும் பொருட்படுத்தாது செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது.

மேலும் படிக்கவும் ...
    சிவகங்கை மாவட்டம் அருகே திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் கொடுப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்து மட்டும் அல்லாமல் சொன்னபடி  அதனை  கொடுத்தும் குடிப்பழக்க நோயுள்ளவர்களை (மதுபிரியர்கள் எனவும் அழைப்பர் ) மகிழ்ச்சி அடைய செய்து உள்ளனர் மாப்பிள்ளை தரப்பை  சேர்ந்த இளைஞர்கள் சிலர்.

    சிவகங்கை அருகே மேளவெள்ளஞ்சி பகுதியை சேர்ந்த ஜெயமுத்து , சரண்யா,  ஆகியோர் திருமண வரவேற்பு  பிளக்ஸ் போர்டில்  வரவேற்பு போர்டு கீழே அதில் எழுத பட்டு இருந்தது  குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்று  பிளகஸ் போர்டு வைத்து இருந்தனர் அதில் சில கண்டிசன் போடப்பட்டு இருந்தது. அதில்  திருமணம் ஆனவர்கள் என்றால்  ஒரு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்றும் , திருமணம் ஆகதாவர்களுக்கு  இரண்டு குவாட்டரும் சிக்கனும் இலவசமாக கொடுக்கபடும் அதற்க்கு ஆதார் கார்டு கட்டாயம் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

    ஆதார் கார்டை வாங்கி பார்த்து விதிமுறை படி குவாட்டர்களை கொடுத்து குடிமகன்களை குஷி படுத்தி உள்ளனர். இதில் வெளியூர் என்றால் ஒரு குவாட்டர் ,உள்ளுர் என்றால் இரு குவாட்டர்  கொடுக்கபட்டது  மேலும் குவாட்டர் (மது) வேண்டாம்  சொல்லுபவர்களுக்கு  பீர் கொடுத்து உள்ளனர் .

    இது கூறித்து இளைஞர்கள் சிலர்  கூறும்போது தற்போது கல்யாணம் , காதுகுத்து உட்பட எந்த விழா, என்றாலும் மது இல்லாமல் விழா இல்லை என்று ஆகிவிட்டது. இந்த திருமணத்திற்கு வருபவர்கள் எப்படியும் மது அருந்தபவர்களும் வருவார்கள் எப்படியும் சாப்பிடுவதற்கு முன்னால் மது குடிக்க வேண்டும் தோன்றும்ம. திருமணத்திற்கு வந்தவர்கள் ஒன்று சிவகங்கை, மானாமதுரை போய் மது  வாங்க வேண்டும் அதனால் நாங்கலே இலவசமாக மது அருந்தபவர்களுக்கு மட்டும் குறிப்பாக 35வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுத்து உள்ளோம் யாரையும் வற்புறுத்தி கொடுப்பதில்லை.

    இதையும் படியுங்கள் :  தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை, தமிழக அரசு கவுரவ பிரச்னையாக கருதக்கூடாது: உச்சநீதிமன்றம்

    ஆதார் கார்டு வாங்கி செக் செய்த பிறகே விதிமுறை படி  மது கொடுத்தோம்எ ன்றனர். எதையாவது வித்தியாசமாக பன்ன வேண்டும் நினைத்து குடிப்பழக்க நோயுள்ளவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்து உள்ளனர்.

    மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்பது குழந்தையிடம் கேட்டால் கூட அழகாக கூறும். காலம் மாறிவிட்டதாக கூறி இளைஞர்கள் தங்கள் குடும்ப நலனையும் பொருட்படுத்தாது செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chicken, Sivagangai

    அடுத்த செய்தி