ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாவோயிஸ்ட்டுகளுடன் திமுக பிரமுகருக்கு தொடர்பா? போலீஸ் விசாரணை!

மாவோயிஸ்ட்டுகளுடன் திமுக பிரமுகருக்கு தொடர்பா? போலீஸ் விசாரணை!

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கேரளாவில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மாவோயிஸ்ட் உடன் தொலைபேசியில் உரையாடியதாக திமுக ஒன்றிய செயலாளரிடம் கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தை சேர்ந்த விஜயகுமார், திமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரை நேற்று மாலை சிலர் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றதாக அவரது உறவினர்கள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், விஜயகுமாரை அழைத்து சென்றது கியூ பிரிவு போலீஸார் என்பது தெரியவந்தது. கடந்த மாதம் 28-ம் தேதி கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட காடையாம்பட்டியைச் சேர்ந்த மணிவாசகத்துடன், விஜயகுமார் தொலைபேசி தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரிக்கவே கியூ பிரிவு போலீசார் விஜயகுமாரை அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நீண்ட நேரம் விசாரணைக்கு பின்னர் விஜயகுமாரை போலீஸார் விடுவித்தனர்.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு குறித்து விஜயகுமாரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியது திமுக பிரமுகர்களிடையே. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எட்டு வழி சாலை பிரச்சனை தொடர்பாகவே விசாரணை நடத்தப்பட்டதாக விஜயகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published:

Tags: DMK, Maoist, Salem