• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இலங்கை அகதிகள் கள்ளத் தோனியில் தப்பி செல்ல உதவியதாக நாகையில் இருவர் கைது

இலங்கை அகதிகள் கள்ளத் தோனியில் தப்பி செல்ல உதவியதாக நாகையில் இருவர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

நாகையில் இருந்து இரண்டு இலங்கை அகதிகளை கள்ளதோணியில் அனுப்பி வைத்த இரண்டு பேரை, க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

  • Share this:
நாகையில் இருந்து இரண்டு இலங்கை அகதிகள் கள்ளதோணி மூலம் இலங்கை வந்த போது இலங்கை நாட்டு எல்லையான காங்கேசன் துறைமுகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சென்னை க்யூ பிரிவு போலீசாருக்கு இலங்கை கடற்படை அதிகாரிகள் தகவல் அளித்தனர்.

மேலும் அவர்கள் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து அதில் பதிவாகியிருந்த எண்ணையும் சென்னை க்யூ பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சென்னை க்யூ பிரிவு போலீசார் நாகை மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து நாகை க்யூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் நாகை அருகே செருதூர் சிங்காரவேலர் நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து நாகை க்யூ பிரிவு போலீசார் தமிழ்வாணனை நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன்(47) என்பவர் கடந்த 10ம் தேதி தொடர்பு கொண்டு நாலுவேதபதி அருகே இரண்டு பேர் நிற்பார்கள். அவர்களை படகில் ஏற்றிக்கொண்டு இலங்கை எல்லையில் விட வேண்டும் என்றார்.

Also read... மதுரையில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு - 120 மருத்துவமனைகள் குறித்து ஐ.எம்.ஏ.,வில் புகார்

இதன்படி அங்கு நின்ற இரண்டு பேரை படகில் ஏற்றி இலங்கை எல்லையில் விட்டு விட்டு திரும்பி வந்தேன் என்றார். இதையடுத்து நாகை க்யூ பிரிவு போலீசார் தமிழ்வாணனை கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் ஒப்படைத்தனர். கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்வாணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் சந்திரனை நேற்று கீழையூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சி அகதிகள் முகாமில் தங்கியிருந்த பாலகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த உறவினர் திலக்சன் ஆகிய இரண்டு பேரும் செல்போனில் தொடர்பு கொண்டு நாகையில் இருந்து கள்ளதோணி மூலம் இலங்கை எல்லையில் விடும்படி கேட்டுக்கொண்டனர்.

அதற்கு ரூ.25 ஆயிரம் தருவதாக கூறினர். இதன்படி அவர்களை நாலுவேதபதி பகுதிக்கு வரவழைத்து தமிழ்வாணன் உதவியுடன் இலங்கை அனுப்பி வைத்ததாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: