Home /News /tamil-nadu /

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 90% புணரமைப்பு பணிகள் நிறைவு: அமைச்சர் இ.வ வேலு

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 90% புணரமைப்பு பணிகள் நிறைவு: அமைச்சர் இ.வ வேலு

அண்ணா  நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம்

90% சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம்  புணரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "  ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமான சென்னையில் இருக்கின்ற கோட்டூர்புரம்  அண்ணா நூற்றாண்டு நூலகம் முந்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் இந்த நூலகத்தை பார்வையிட்டபோது " இதுபோன்று பரந்து விரிந்து மிக அதிகமான புத்தகங்களை கொண்ட நூலகத்தை வேறு எங்கும் கண்டதில்லை' என்று கூறியதாக தெரிவித்தார்.   

    புணரமைப்பு பணிகள் குறித்து பேசிய அவர், " புதியதாக ஆட்சி பொறுப்பேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதிலமடைந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீர்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு  ரூ.32.49 கோடி ஒதுக்கீடு செய்தார். அதில் சிவில் பணிக்காக ரூ.18.26 கோடியும், மின் பணிக்காக ரூ.14.23 கோடியும் ஒதுக்கப்பட்டு, பணிகள்  நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 30.9.2022 அன்று முடிவடைய வேண்டுமென்று ஒப்பத்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும்  "இந்நூலகம் 8 தளங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு தளங்களாக பார்த்து. எங்கெல்லாம் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. எங்கெல்லாம் பணிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்று விரிவாக ஆய்வு செய்யப்பட்டது என்றார்.  மேலும்,  தற்போது புதியதாக 30,160 சதுர அடி அளவிற்கு தரைவிரிப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  புதியதாக எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,  பழுதடைந்த ஜெனரேட்டருக்குப் பதிலாக, தற்போது புதியதாக அதிக மின்சக்தி கொண்ட் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஓலைச்சுவடிக்கென 7வது தளம் அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், " ஓலைச்சுவடிகளை தற்போதுள்ள தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாத்திடவும், மக்கள் பார்வைக்கு சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது, 90% சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

    இதையும் வாசிக்க: கல்வி உதவித் தொகை நுழைவுத் தேர்வில் இந்தியை திணிக்க முயற்சி: கனிமொழி குற்றச்சாட்டு  

    இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.மணியசகம். முதன்மைத் தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (தேர்வு) செல்வகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி