தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திராவில் இருந்து 312 கன அடி நீர் புழல் ஏரியை தற்போது வந்தடைந்தது
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து திறக்கப்பட்ட நீரானது வினாடிக்கு110 கன அடி வீதம் புழல் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நேற்று மாலை 4 மதகுகளில் மூலம் திறக்கப்பட்ட நீரானது 250 கன அடி திறக்கப்பட்டு தற்போது 312 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது . தற்போது நீர் புழல் ஏரியை வந்தடைந்தது.
கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இதே போல சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த புழல் நீரேற்று நிலையத்தில் 230 mld நீரானது சுத்திகரிக்கப்பட்டு இங்கிருந்து நாளொன்றுக்கு சுமார் 120 mld குடிநீர் தேவைக்காக வினியோகிக்கப்படும்.
இங்குள்ள ஏரியில் ஒரு குறிப்பிட்ட கொள்ளளவை எட்டும் இந்த செயல்பாடு 24/7 செயல்முறையில் பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு இங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படும்
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.