ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வெளியே முதல்வர் போராட்டம்... உள்ளே ஆளுநர் சைக்கிளிங்!

வெளியே முதல்வர் போராட்டம்... உள்ளே ஆளுநர் சைக்கிளிங்!

நாராயணசாமி மற்றும் கிரண்பேடி

நாராயணசாமி மற்றும் கிரண்பேடி

வெளியே முதல்வர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, ஆளுநர் மாளிகைக்கு உள்ளே ஆளுநர் கிரண்பேடி 45 நிமிடங்கள் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  வெளியே முதல்வர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, ஆளுநர் மாளிகைக்கு உள்ளே ஆளுநர் கிரண்பேடி 45 நிமிடங்கள் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக 5-வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரின் போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

  முதல்வர் நாராயணசாமியுடன், கிரண்பேடி இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாகக் கூறியிருந்தார். ஆனால், இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. ஆனால், முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் ஆளுநர் கிரண்பேடி. அதில், `எங்கே, எப்போது, யாரையெல்லாம் வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

  கடிதத்தைப் பெற்றுக்கொண்ட முதல்வர் நாராயணசாமி, கடிதத்தைப் படித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில், `` அரசால் அங்கீகரிக்கப்படாத சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் பங்கேற்க கூடாது என கூறியிருந்தேன். 6 மணி வரை பதில் இல்லை. 7.10 க்கு கடிதம் வந்தது. அதில் கிரண்பேடியின் ஆணவம் தான் தெரிந்தது. அவரை போல் எங்கு கூட்டம் நடத்த வேண்டும் என எங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொய்யாக கூறியுள்ளார். அறவழியில் போராடும் நாங்கள் அரசு அலுவல்களை நடத்தி வருகிறோம். உண்மையில் கிரண்பேடி கொண்டு வந்த ராணுவத்தினர் தான் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர். ஆனால் கிரண்பேடி சுதந்திரமாக சைக்கிள் ஓட்டுகிறார்.

  பிரச்னைக்கு கிரண்பேடி தீர்வு காண விரும்பவில்லை என கடைசியாக வந்த கடிதத்தின் மூலம் தெரிகிறது. டெல்லி முதல்வர் மற்றும் துணை முதல்வர் போராட்டத்தை வாழ்த்த நாளை வருகிறார்கள். போராட்டத்திற்கு பயந்து கிரண்பேடி முன் கூட்டியே புதுச்சேரி வந்துள்ளார், இது 75% வெற்றி. யார் சொல்வதையும் கிரண்பேடி ஏற்க மாட்டார். அவர் மனம் எங்களுக்குத் தெரியும்’’ என்று கூறினார்.

  வெளியே முதல்வர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, ஆளுநர் மாளிகைக்கு உள்ளே ஆளுநர் கிரண்பேடி 45 நிமிடங்கள் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

  Published by:Ilavarasan M
  First published:

  Tags: Kiran bedi, Narayana samy