Home /News /tamil-nadu /

போதைக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போர் போல பேரணி நடத்த திட்டம்.. கிருஷ்ணசாமி

போதைக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போர் போல பேரணி நடத்த திட்டம்.. கிருஷ்ணசாமி

க.கிருஷ்ணசாமி

க.கிருஷ்ணசாமி

தமிழக அரசு மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் எண்ணற்றவர்கள் எனவும் பலரும் சிறைச்சாலையிலேயே வாழ்க்கையை முடித்துள்ளார்கள் எனவும் கூறினார்.

    ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து எடுத்து சென்ற இயற்கை வளங்கள் பல லட்சம் மதிப்புள்ளவை எனவும் பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது நாம் உண்மையான சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார். இருப்பினும் சில நாடுகளை (ஐரோப்பா) ஒப்பிடும் போது கல்வி ஆகியவற்றில் இந்தியா பின்தங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இளைஞர் சமுதாயம் சில காலங்களாக மது கஞ்சா போன்ற போதைக்கு ஆளாகி வருவது கவலையளிக்கிறது. மது, கஞ்சா போன்ற போதை பழக்கம் உடல் நலம் மட்டுமல்லாமல் மன நலத்தையும் பாதிக்க செய்யும், இதனால் போராடி பெற்ற சுதந்திரத்தை இழக்க கூடிய அபாயத்தில் இருக்கிறோம். இந்த போதை பழக்கங்களால் இளைஞர்கள் கல்வியில் பின்தங்கி போவார்கள் என்றார்.

    நாளை சுதந்திர தினத்தன்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் "மது, புகை, போதை இல்லா பாரத தேசம் - தமிழ் நாட்டை உருவாக்கும்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தமிழகத்தில் இரு சக்கர வாகன பேரணி மேற்கொள்ள உள்ளோம்.  இந்த பிரச்சாரம் இரண்டாம் சுதந்திர போர் என்று கூட சொல்லலாம்.

    தமிழக அரசு தமிழகத்தில் மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த போதை பொருட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மாநில மத்திய அரசு இதனை தடுக்க முன்வர வேண்டும். முக்கியமாக கஞ்சா அபின் போன்ற போதை வஷ்த்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாளை கோவையில் 5 இடங்களில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை அனுமதி வழங்கியபின் நடத்தப்படும் எனவும் கூறினார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Doctor krishnaswamy, Independence day, Puthiya Tamilagam

    அடுத்த செய்தி