தூய தமிழன் என்றால் பா.ஜ.கவைச் சேர்ந்தவன்தான் - பொன்.ராதாகிருஷ்ணன்

தூய தமிழன் என்றால் பா.ஜ.கவைச் சேர்ந்தவன்தான் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பா.ஜ.க தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூய தமிழன் என்றால் பா.ஜ.கவைச் சேர்ந்தவன்தான் - பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்
  • Share this:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இன்று பா.ஜ.க தலைவர்கள் வேல் யாத்திரையைத் தொடங்கினர். திருப்பூரில் நடைபெற்ற வேல் யாத்திரையில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் குஷ்பூ ஆகியோர் வந்தனர். அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘நரேந்திர மோடி அவதார புருஷன். அவரை போல இன்னொருவர் கிடைக்க ஒரு யுகமே தவம் செய்ய வேண்டும். பிரதமர் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் சரிதான். இந்த யாத்திரையை நடத்த கூடாது என பல்வேறு போராட்டங்கள் நடத்துகின்றனர்.

வேல் யாத்திரைக்கு எதிராக தடி யாத்திரை. இது ஏமாளி தமிழகம் இல்லை. 90 வயது பெரியவர் தன்னை காத்துக் கொள்ள வைத்திருந்த தடி அது. தூய தமிழன் என்றால் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் தான். தமிழின துரோகிகள் ஒன்றிணைந்து பா.ஜ.கவிற்கு எதிராக வருவார்கள். இந்து என்றால் திருடன் என சொன்னவர் கருணாநிதி. மு.க.ஸ்டாலின் ஸ்ரீ ரங்கம் கோவிலில் திருநீறை அழித்தார். அதுபற்றி யாரும் கேட்கவில்லை. கைநிறைய தீருநீரை வாங்கி வீசிவிட்டு சென்றார். இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.


நாம் வேல் யாத்திரை போகிறோம். உதயநிதி ஸ்டாலின் வேறு யாத்திரை போகிறார். புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்கிறது. காவிக்கு அரையடி இடம் கிடையாது என கருணாநிதி சொன்னார். ஆனால் இன்று தமிழக மக்கள் திராவிட கழகத்திற்கு அரையடி இடம் கூட தரமாட்டார்கள்’என்றார்.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading