படுக்கையில் படுத்தவாறே வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற முன்னாள் காவல்துறை டிஜிபி ஒருவரை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பஞ்சாப் மாநில டிஜிபியாக இருந்தவர் சுமேத் சிங் சைனி, 1982 பஞ்சாப் மாநில பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த சுமேத் சிங் சைனி, மூத்த எஸ்.பியாக இருந்து திறம்பட பணியாற்றியவர். குறிப்பாக 80, 90 களில் பஞ்சாபில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்த போது, காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பெயரெடுத்தவர். இதன் காரணமாகவே காலிஸ்தான் அமைப்பினர் இவரை கொலை செய்ய ஒரு முறை முயற்சித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் இருந்து தப்பினார்.
படிப்படியாக முன்னேறி 2012ம் ஆண்டு பஞ்சாப் மாநில டிஜிபியாக இவர் ஆன போது இந்தியாவின் இளம் டிஜிபி என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 2018ம் ஆண்டு இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதையும் படிங்க: காதலனுடன் மொபைலில் பேசி பெற்றோரிடம் சிக்கிய சிறுமி வீட்டில் இருந்து தப்பிக்க திரைப்பட பாணியில் செய்த சாகசம்!
கடந்த 1994ம் ஆண்டு லூதியானா சீனியர் எஸ்.பியாக இவர் பணியாற்றிய போது மார்ச் 15ம் தேதி லூதியானாவைச் சேர்ந்த தொழிலதிபர் வினோத் குமார், அவரின் மைத்துனர் அசோக் குமார் மற்றும் அவர்களுடைய கார் ஓட்டுனர் முக்தியார் சிங் ஆகிய மூவர் மாயமானார்கள்.
இந்த மூவரும் கொலை செய்யப்பட்டதாகவும், சுமேத் சிங் சைனி உள்ளிட்ட 4 போலீசார் தான், அவர்களின் இறப்புக்கு காரணம் எனவும் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும் மூவரின் உடல்களும் இதுவரை கண்டறியப்படாமலே உள்ளது. மேலும் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக சைனி பட்டியலிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும்..
இதையும் படிங்க: Earthquake : பெங்களூருவில் இன்று காலை நில அதிர்வு
இந்த வழக்கு, தற்போது சிபிஐ-யால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சஞ்சீவ் அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் கலந்து கொண்ட சுமேத் சிங் சைனி, படுக்கையில் படுத்தவாறே விசார2யில் கலந்து கொண்டதை பார்த்த நீதிபதி, சைனியிடம் விசாரணைக்கு இப்படி படுத்துக்கொண்டே தான் கலந்துகொள்வீர்களா என கேட்டதற்கு தனக்கு காய்ச்சல் மற்றும் உடல்நலக் கோளாறு என பதிலளித்திருக்கிறார்.
இதையும் படிங்க: 12 குடும்ப ஓட்டுகள் இருந்தும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற வேட்பாளர் - வாக்கு எண்ணும் மையத்தில் கதறி அழுதார்...
இருப்பினும் நீதிமன்றத்தின் மாண்பினை குலைக்கும் வகையில் நடந்துகொண்டதாக சுமேத் சிங் சைனியை எச்சரித்த நீதிபதி எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு உரிய வகையில் மதிப்போடு நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் உடல்நலக் கோளாறு என கூறுவதற்கு தகுந்த மருத்துவ சான்றிதழ் எதையும் சைனி தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.