சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குதித்து அங்கு சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
இது தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. அப்போது, பதில் அளித்துப் பேசிய குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், கட்டிடம் கட்டியதில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் அந்த குடியிருப்பிற்கான குடிசை மாற்று வாரியத்தின் உதவிப் பொறியாளர் பாண்டியன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகிய இரண்டு அதிகாரிகள் இன்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கட்டிடத்தின் தரத்தை ஐஐடி-யின் சிறப்பு குழு மூலம் ஆய்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
Must Read : புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிட விவகாரம் : ஓ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் - இ.பரந்தாமன்
சிறப்பு குழுவின் ஆய்வறிக்கையை கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையின் அடிப்படையில் மேலும் சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.