• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சசிகலாவுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார் - புகழேந்தி

சசிகலாவுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார் - புகழேந்தி

சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜாதி அரசியல் தற்போது உருவாகி உள்ளதாகவும், பழனிசாமி தன் தொகுதியிலேயே தோற்றுவிட்டார் என்றும் கூறினார்.

  • Share this:
    எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியில் உள்ளதாகவும், நேரம் வரும்போது அவரை நீக்கிவிட்டு, சசிகலாவுடன் இணைந்து பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார் எனவும், அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி, மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி இவ்வாறு கூறினார்.

    முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் 'ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டு புலி வேடம் போடுகின்ற எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கத்திலிருந்து கழகத்தை மீட்போம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் 90% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ள ஆளுங்கட்சிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும், திமுக நல்லாட்சியை மக்களுக்கு அளித்து வருவதாகவும் தெரிவித்தார். அதேப்போல் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சி தலைமை ஒரு வாழ்த்து கூட சொல்லாதது வேதனை அளிப்பதாக கூறினார்.

    இந்த கட்சி திசைமாறி சென்று கொண்டிருக்கிறது என்று பேசிய அவர், அதிமுக கட்சி யாருடைய சொத்தும் அல்ல இது ஏழைகளின் சொத்து. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் என்று கூறினார். மேலும் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன உரிமை உள்ளது என்று கேள்வி எழுப்பிய புகழேந்தி, வாரிசு அரசியல் செய்யலாமா என்றும் கேட்டார்.

    அதிமுக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அதை கடந்து வேறு பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், தனக்கு தெரிந்து இப்படி ஒரு தோல்வியை அதிமுக கண்டதில்லை என்று குறிப்பிட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ளதாகவும், நேரம் கிடைத்தால் அவரை நீக்கிவிட்டு, சசிகலாவுடன் இணைந்து கட்சியை வழிநடத்துவார் என்று உறுதிபட தெரிவித்தார் புகழேந்தி.

    எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் முடியும் என்றார். கட்சிக்குள் பிளவுகள் இருந்தால் அக்கட்சி நிச்சயம் வெற்றி பெறாது என்றும், எடப்பாடி பழனிசாமி அனைவரையும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜாதி அரசியல் தற்போது உருவாகி உள்ளதாகவும், எடப்பாடி தன் தொகுதியிலேயே தோற்றுவிட்டார் என்றார்.

    Must Read : தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தது ஏன்? சசிகலா விளக்கம்

    ஓ.பி.எஸ்., என்கிற ஒற்றை தலைமையில் கட்சி நடத்தப்பட்டால் என்னை உட்பட அனைத்து தொடண்டர்களும் ஏற்று கொள்வார்கள் என்று புகழேந்தி கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: