விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்! புகழேந்தி அறிவிப்பு

டி.டிவி.தினகரனிடம் சிலீப்பர் செல் என்பதே ஒன்று கிடையாது. ஆட்சியாளர்களை மிரட்டவே அவர் அதனை கூறிவந்தார் - புகழேந்தி

விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்! புகழேந்தி அறிவிப்பு
புகழேந்தி
  • News18
  • Last Updated: November 10, 2019, 7:45 PM IST
  • Share this:
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க பிரிவினைக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் அணியில் செயல்பட்ட புகழேந்தி அ.ம.மு.கவின் செய்தித் தொடர்பாளராக இருந்துவந்தார். இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு டி.டி.வி.தினகரனை புகழேந்தி நேரடியாக விமர்சிக்கத் தொடங்கினார். இந்தநிலையில், கடந்த வாரம் தமிழக முதல்வர் பழனிசாமியை புகழேந்தி திடீரென சந்தித்தார். அப்போது இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக முதல்வரைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். இந்தநிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, ‘டி.டி.வி.தினகரனுடன் இணைந்த காரணத்திற்காக மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

டி.டி.வி.தினகரனிடம் இருந்து விலகுவதாகவும் மன மகிழ்வுடன் அ.தி.மு.கவில் இணைவது என்ற முடிவை எட்டியுள்ளதாக கூறினார். அ.ம.மு.கவில் சிலீப்பர் செல் என்பது முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தான். தினகரனை முடித்த பிறகு அவரும் தாய் கழகம் திரும்புவார் என விமர்சனம் செய்தார்.


அதே போல கட்சியில் இருந்து தான் உள்பட முக்கிய நிர்வாகிகள் 16 பேர் அந்த அமைப்பில் இருந்து விலகியதாக தேர்தல் கமிசனிடம் தெரிவித்துள்ளோம். மேலும் நாங்கள் கையேழுத்திட்ட பிரமாணப் பத்திரத்தையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளோம். எனவே தினகரன் இனி கட்சியைப் பதிவு செய்யவும் முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

டி.டி.வி.தினகரனுக்கு துணை நின்று கடுமையாக உழைத்தேன். ஆனால் மனசாட்யே இல்லாத மனிதர் என்பது டி.டி.வி.தினகரன் தான் என்று விமர்சனம் செய்தார். சசிகலாவிற்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன் என்று கூறிய புகழேந்தி, சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்காக டி.டி.வி.தினகரன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கவலை தெரிவித்தார். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகுதான் அவர் அ.தி.மு.கவில் இணைவது குறித்து விரிவாக தெரியவரும்.

முதலமைச்சரை அணுகி விரைவில் இணைப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று புகழேந்தி தெரிவித்தார். கர்நாடக அரசியலில் இருந்து விலகி, தமிழக அரசியலில் மட்டுமே முழுவதுமாக ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். தினகரன் அமைப்பில் இருந்தவர்கள் பெரும்பாலும் விலகிவிட்டார்கள். மற்றவர்கள் மன உழைச்சலுடன் உள்ளார்கள். டி.டி.வி.தினகரனின் அழிவுக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பனே முக்கிய காரணம்.டி.டிவி.தினகரனிடம் சிலீப்பர் செல் என்பதே ஒன்று கிடையாது. ஆட்சியாளர்களை மிரட்டவே அவர் அதனை கூறிவந்தார். அ.தி.மு.கவிற்கு எதையும் எதிர்பார்த்து செல்லவில்லை. அ.தி.மு.க ஆட்சி நல்ல முறையில் தொடரவேண்டும் என்பதற்காகவும் அ.தி.மு.கவில் இணைந்து செயல்படவும் முடிவு செய்ததாக தெரிவித்த புகழேந்தி, அ.ம.மு.கவில் உள்ள ஐடி விங்கில் உள்ளவர்கள் ஆபாச படம் எடுப்பவர்களாக உள்ளனர். அவர்கள் விரைவில் சிறை செல்வார்கள் என்றும் கூறினார்.

நல்ல மனிதர்கள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வத்தை மக்கள் ஏற்றதன் காரணமாக இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது தெளிவாகிறது’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்