முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தி திடீர் நீக்கம்!

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தி திடீர் நீக்கம்!

புகழேந்தி

புகழேந்தி

ஒ.பன்னீர்செல்வம் குறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி வந்த அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவை நேற்று புகழேந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது,

கூட்டணி மூலமாக 23 தொகுதிகளைப் பெற்றுக்கொண்ட பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி வருகிறார். கூட்டணியில் பாமக இல்லையென்றால் 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் என்று அவர் கூறுகிறார். முதலில், போட்டியிட்ட 23-ல் 18 இடங்களில் தோல்வியடைந்ததை பற்றி பாமக ஆய்வு செய்ய வேண்டும்.

Also read: அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பி.எஸ். தேர்வு!

ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டதால்தான், அதிமுகஎம்எல்ஏக்கள் உதவியுடன் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்.பி. ஆனார். எனவே, அவர் ஓபிஎஸ்-ஐ தவறாகப் பேசுவதை ஏற்க முடியாது. ஒரு கூட்டணியில் சேருவது, பின்னர் வெளியேறுவது, எங்களால்தான் எல்லாமே நடந்தது என்று கூறுவது பாமக-வுக்கு வழக்கம். ஓபிஎஸ் குறித்து பேசினால், நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம் என்று கருதினால், அதுமுட்டாள்தனமானது. பாமக போன்ற சிறிய கட்சி, அதிமுகவை கிண்டல் செய்வதை எப்படி வேடிக்கைப் பார்க்க முடியும் என்று கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்த அறிவிப்பில், அதிமுக கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் புகழேந்தி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: ADMK, OPS - EPS, Pugazhendhi