முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக அலுவலகம் என்ன கோடநாடா? பணத்தை திருடுவதற்கு? எடப்பாடி பழனிசாமிக்கு அழிவுகாலம் - புகழேந்தி பாய்ச்சல்

அதிமுக அலுவலகம் என்ன கோடநாடா? பணத்தை திருடுவதற்கு? எடப்பாடி பழனிசாமிக்கு அழிவுகாலம் - புகழேந்தி பாய்ச்சல்

புகழேந்தி

புகழேந்தி

OPS vs EPS : கொஞ்சம் ஏமாந்தால் மோடியின் இடத்தில் கூட அமர்வார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் புரட்சிப் பயணத்தை துவக்கும் போது எடப்பாடி பழனிசாமி சிறையில் இருப்பார் என புகழேந்தி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுகவின் அமைப்புச் செயலாளரான பொன்னையன் , கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பன்  என்பவருடன் பேசியதாக வெளியான செல்போன் ஆடியோ உரையாடல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள ஓ.பி.எஸ்., இல்லத்தில் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இன்னும் பல உரையாடல்கள் இருப்பதாகவும், அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடுவோம் என அவர் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது,” பொன்னையன் பல உண்மைகளை வெளியில் பேசியிருக்கிறார். தனக்கு வரக்கூடிய மிரட்டல்களால் அவர் மாற்றிப்பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பொன்னையன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பொன்னையன் மேல் எடப்பாடி பழனிசாமி அணியினர் கோபமாக இருப்பதால், அவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை.

ஜெயலலிதாவால் தூரமாக தூக்கி எறியப்பட்ட கே.பி.முனுசாமி பற்றி பொன்னையன் விரிவாக பேசிவிட்டார். 22 எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்று எடப்பாடி பழனிசாமியை மிரட்டி தான் ராஜ்யசபா எம்.பி., பதவியை சி.வி.சண்முகம் பெற்றார். சாதி வெறி அதிமுகவை ஆட்டிப்படைக்கிறது. ஓ.பி.எஸ்.சின் தர்மயுத்தம் இல்லையென்றால் கே.பி.முனுசாமி காணாமல் போயிருப்பார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்

ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியில் வேறு யாரும் அமரக்கூடாது என்றுதான் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகி உள்ளார். இது நியாயமா?

ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் சென்ற போது அவருடன் வந்த அனைவருமே கட்சியினர்தான். ஆனால் ஏற்கனவே கட்சி அலுவலகத்தில் ரவுடிகளை குவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. போலீஸ் இல்லாவிட்டால் அதிமுக அலுவலகத்தில் பல கொலைகள் நடந்திருக்கும்.

நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டு, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை விட்டுத்தந்து, சொந்தத்தம்பியை கட்சியில் இருந்து நீக்கியதைக் காட்டிலும் ஓ.பி.எஸ்., வேறு என்ன தியாகம் செய்ய வேண்டும்?

ஓ. பன்னீர் செல்வம்

ரவீந்தரநாத், மு.க ஸ்டாலினை சந்தித்ததைப் பற்றி பேசுகின்றனர். அன்று ஸ்டாலின் கூட முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து சுனாமி நிவாரணம் தந்தார். அப்படியென்றால் ஜெயலலிதாவையே நீக்கச் சொல்லியிருக்கலாமே?

இன்னும் பல உரையாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக வெளியிடுவோம். திமுகவுக்கு பதில் சொல்லும் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே இருக்கும் காலம் விரைவில் வரும். ஜெயலலிதா நினைவிட திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பிரதமரைக் கூட எடப்பாடியால் அழைத்துவர முடியவில்லை. ஆனால் ஸ்டாலின் குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவரை எல்லாம் அழைத்து வந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் காலில் விழுந்து எடப்பாடி & கோ, மன்னிப்பு கோரினால் ஒன்றாக இணைந்து பணியாற்றத் தயார். அதிமுக அலுவலகத்துக்கு செல்வதற்கு ஓ.பி.எஸ் யாரையும் கேட்க வேண்டியதில்லை. துரோகி எடப்பாடி பழனிசாமிக்கு அழிவுகாலம் வந்துவிட்டது. சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் வடிவில் எடப்பாடி பழனிசாமிக்கு அழிவுகாலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஓபிஎஸ்- இபிஎஸ்

சரியான நேரத்தில் காவல்துறையை அனுப்பி இன்று அதிமுகவினரின் பிணம் விழாமல் காத்தது ஸ்டாலின்தான். இதைச்சொல்வதில் தயக்கமில்லை. ஓ.பி.எஸ்க்கு இன்னொரு முகம் உண்டு. கட்சியை விட்டு வெளியேற்றினால் அமைதியாக இருப்பார் என்று நினைத்ததற்கு பதிலாக, அவர் அதிரடி காட்டிய இன்னொரு முகம் தொடரும்.

Also see... மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடலுறுப்புகளால் 4 பேருக்கு வாழ்வு..

சாது மிரண்டால் காடு கொள்ளாது. அதிமுக அலுவலகம் என்ன கோடநாடா? பணத்தை திருடுவதற்கு? அது எங்கள் வீடு. அங்கு திருடவேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் ஏமாந்தால் மோடியின் இடத்தில் கூட அமர்வார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் புரட்சிப் பயணத்தை துவக்கும் போது எடப்பாடி பழனிசாமி சிறையில் இருப்பார்” இவ்வாறு புகழேந்தி பேசினார்.

First published:

Tags: ADMK, Ponnaiyan, Pugazhendhi