புதுச்சேரியில் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பூ விற்கும் பெண்கள்

புதுச்சேரியில் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் கோயிலில் பூ விற்கும் பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

புதுச்சேரியில் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பூ விற்கும் பெண்கள்
புதுச்சேரியில் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் கோயிலில் பூ விற்கும் பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 4:21 PM IST
  • Share this:
கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்க வந்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை மணக்குள விநாயகரின் பக்தரான தொழில்துறை அமைச்சர்  எம்.சி.சம்பத் புதுச்சேரியின் மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.

இருவருக்கும் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். தரிசனத்திற்குப் பிறகு வெளியே வந்த அமைச்சர்  செல்லூர் ராஜூவை பூ விற்கும் பெண்கள் அடையாளம் கண்டு கொண்டனர். அவரை கை கும்பிட்டு வரவேற்ற பெண்கள் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். இதற்கு சம்மதித்த அமைச்சர், அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Also read: குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம் - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்


பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த எம். சி. சம்பத்தைக் கண்டுபிடிக்க முடியாத பூ விற்கும் பெண்கள் முகமூடி அணிந்திருந்தும் செல்லூர் ராஜூவைக் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading